20 வயசுல அது இப்படித்தான் லீக் ஆச்சு.. தோழியுடன் பிரியா பவானி சங்கர் சண்டை..!

20 வயசுல அது இப்படித்தான் லீக் ஆச்சு.. தோழியுடன் பிரியா பவானி சங்கர் சண்டை..!

நடிகை பிரியா பவானி சங்கர் தன் அழகை பற்றி வரக்கூடிய கருத்துக்களுக்கும் தன்னுடைய கல்லூரி கால நினைவுகள் பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். 

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

என்னிடம் பலரும் என்னுடைய மூக்கு இன்னும் கொஞ்சம் கூறாக இருந்திருக்கலாம். அப்படி இருந்தால் உங்களுடைய முகத்திற்கு இன்னும் அழகாக இருக்கும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

ஏனென்றால் நடிகைகள் வெள்ளையாக கொஞ்சம் அழகாக இருந்தால் மும்பை பெண் போல இருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். நான் எதற்காக மும்பை பெண் போல் இருக்க வேண்டும்..? அப்படி என்றால் தமிழ் நாட்டு பெண்கள் அழகே கிடையாதா..? எதற்காக இப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. 

இப்போது என்னுடைய உடல் உறுப்புகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் யாராவது என்னிடம் சொன்னால் அவர்களுடைய கதை அவ்வளவுதான்.

ஒருவேளை 20 வயதில் என்னுடைய மூக்கை பற்றி என்னிடம் இப்படி கூறியிருந்தால் ஒருவேளை நான் அவர்கள் சொல்வதை சரி என ஏற்றுக் கொண்டு இருந்திருப்பேன். ஆனால், தற்போது அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

நமக்கு இயற்கையாக இருக்கக்கூடிய அழகு தான் அழகு அதனை சரி படுத்துகிறோம் என்று நாமே நம்மை அசிங்கப்படுத்தி கொள்ளக் கூடாது. அது நம்மை நாமே வெறுப்பதற்கு சமம் என பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஒரு முறை என்னுடைய ஹாஸ்டலில் நாங்கள் ஆட்டம் போடும் வீடியோ காட்சி வெளியில் லீக் ஆகிவிட்டது. 

எங்களுடைய ஹாஸ்டலில் நிறைய சினிமா பாடல்களுக்கு நாங்கள் தோழிகள் அனைவரும் சேர்ந்து ஆட்டம் போடுவோம். 

குறிப்பாக சாக்லேட் திரைப்படத்தில் இடம்பெற்ற மலை மலை மருதமலை என்ற பாடலுக்கு நாங்கள் ஆட்டம் போட்டிருக்கிறோம். 

அந்த வீடியோ காட்சி எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. எங்களுடன் இருந்த யாரோ ஒருவர் தான் இதனை லீட் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் வந்தது பெரிய சண்டை ஆனது.

கடைசியாக என்னுடைய தோழி ஒருவர் தான் அவருடைய ஆண் நண்பருக்கு இந்த வீடியோவை அனுப்பி இருக்கிறார்.

அவர் மூலமாகத்தான் இந்த வீடியோ எங்களுடைய கல்லூரி முழுவதும் பரவி விட்டது. அந்த தோழியுடன் பயங்கரமாக சண்டை போட்டோம். 

தற்போது அதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்று தங்களுடைய கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். 

LATEST News

Trending News

HOT GALLERIES