பெண்களை தொடாத நடிகர் இவர் மட்டும்தான்!! வெளிப்படையாக பேசிய பிக்பாஸ் நடிகை விசித்ரா..
மலையாள சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சம்பவமான ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பற்றித்தான். இதுகுறித்து பல பிரபலங்கள் வெளிப்படையாக பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
நடிகைகளும் தங்களுக்கு ஆண்கள் கொடுத்த தொந்தரவு பற்றியும் ஓப்பனாக பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான விசித்ரா அளித்த பேட்டியொன்றில் டி ராஜேந்தர் பற்றிய உண்மையை பகிர்ந்துள்ளார்.
எனக்கு தெரிந்து 100 சதவீதம் அந்தமாதிரியான விஷயம் இல்லை என்று கூறினால் டி ராஜேந்திரன் சாரைத்தான் சொல்லுவேன். அது சினிமாத்துறைக்கே தெரியும், தைரியமாக சொல்லுவேன் யாரும் திட்டமாட்டார்கள். நல்லா தெரியும் அவர் அந்தமாதிரி கிடையாதுன்னு.
மதிப்பு, மரியாதை, இந்த பாக்கி விஷயங்கள் எதுவும் இல்லாமல் ஒரு யோக்கியன் என்று அவரை சொல்லுவேன். நடிகர் பிரபு சாரும் ஒரு கண்ணியமான நடிகர். இதுபோல் சில நடிகர்கள் இருக்கிறார்கள். வேறொரு கோணத்தில் எப்படி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை விசித்ரா.