வெள்ளைநிற ஆடையில் மயக்கும் லுக்கில் தங்கலான் பட நாயகி மாளவிகா மோகனன்..
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சேலையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தற்போது தங்கலான் படம் 100 கோடி வசூலை அள்ளியதை அடுத்து இந்தியில் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் நடிகை மாளவிகா மோகனன், தற்போது வெள்ளை நிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
— Malavika Mohanan (@MalavikaM_) August 31, 2024