நாக சைதன்யா திருமணத்தில் ஏற்பட்ட மாற்றம்!! வருங்கால மருமகளுக்காக நாகர்ஜுனா எடுத்த முடிவு..
சில நாட்களாக தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயத்தார்த்தம் தொடர்பான செய்திகள் தான்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயத்தார்த்தம் நடந்ததாக நாகர்ஜுனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார். பலரும் இதற்கு வாழ்த்து கூறியதை அடுத்து அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைவுப்படுத்தி பேசி வருகிறார்கள்.
இன்னும் திருமண தேதியை நாகர்ஜுனா குடும்பம் முடிவு செய்யவில்லையாம். இப்படியொரு சூழலில் இருக்க அவர்களது திருமணம் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருப்பதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாம். ராஜஸ்தானில் திருமணத்தை வைக்க சோபிதா ரொம்பவே விருப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் திருமணம் நடக்கும் இடம் ஹைதராபாத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு மாற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.