சோபிதாவின் முன்னாள் காதலர் இவர் தானா.. வைரலாகும் புகைப்படம்!!

சோபிதாவின் முன்னாள் காதலர் இவர் தானா.. வைரலாகும் புகைப்படம்!!

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் வெற்றி பெற்று புகழைப் பெற்றவர் சோபிதா துலிபாலா.

அதன் பின்னர், அவர் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். 2016 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "ராமன் ராகவ் 2.0" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் தனது ஆரம்பத்தை செய்தார்.

தமிழ் சினிமாவில், மணி ரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" படத்தில் இளவரசி வானதியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

நடிகை சோபிதா, நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் சோபிதாவின் முன்னாள் காதலர் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் Pranav Misra என்ற ஆடை வடிவமைப்பாளரரை காதலித்து வந்ததாகவும், சில கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இப்படி இணையத்தில் பரவும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கும் என்று தெரியவில்லை.  

LATEST News

Trending News

HOT GALLERIES