மோசமான கமெண்ட்க்கு பதிலடி கொடுத்த கேப்ரில்லா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கேப்ரில்லா சார்ல்டன் தனக்கு வந்த கொச்சையான கமெண்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், "நான் எந்த உடையிலிருந்தாலும், கருத்துகள் எதிர்மறையாகவே வருகிறது. சேலை அணிந்திருந்தாலும், டி-ஷர்ட் அணிந்திருந்தாலும், சரி அதனால் நான் இந்த விதமான கருத்துக்களை கவனிக்கவில்லை" என்று பகிர்ந்துள்ளார்.