விஜய் பிறந்தநாள்: ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'மாஸ்டர்' தயாரிப்பாளர்!

விஜய் பிறந்தநாள்: ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட 'மாஸ்டர்' தயாரிப்பாளர்!

தளபதி விஜயின் பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து இன்றே அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். தளபதி விஜய்யின் பிறந்த நாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்

குறிப்பாக ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனருமான லலித் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு காமன் போதும் டிபி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய், தனது ரசிகர்கள் மத்தியில் எடுத்த செல்பி புகைப்படம் போன்றே இந்த போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அவர் நடித்துவரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அன்றைய தினம் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கும் என கூறப்படுகிறது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES