பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர் தானாம்.. இத்தனை லட்சமா..

பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர் தானாம்.. இத்தனை லட்சமா..

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 7 ஆண்டுகளாக 7 சீசனை கடந்து உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

ஆவலுடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியுள்ளேன் என்றும் இனிமேல் நான் இல்லை என்றும் கமல் ஹாசன் ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை கூறியிருந்தார்.

அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை தான் கமிட் செய்திருக்கிறார்களாம். அவரை வைத்து பிரமோ ஷூட்டும் நடைபெறவுள்ளதாம்.

வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவர நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அதிக சம்பளம் வாங்கிய நபர் யார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசன்களில் அதிக சம்பளம் வாங்கியது நடிகை விசித்ரா தானாம். பிக்பாஸ் 7 சீசன்களில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விசித்ரா, ஒரு நாளைக்கு ரூ. 30,000 சம்பளம் வழங்கப்பட்டதாம். 97 நாட்களுக்கு அவர் ரூ. 29,10,000 சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர் தானாம்.. இத்தனை லட்சமா.. | Bigg Boss Tamil History High Salary Contestant

LATEST News

Trending News

HOT GALLERIES