வெரைட்டியா முத்தம் கொடுக்க சொன்ன மாரி செல்வராஜ்.. நடிகை நிகிலா விமல் ஓபன் டாக்
மலையாள படங்களில் நடித்து வந்த நிகிலா விமல், கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Guruvayoor Ambalanadayil என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அதில் தமிழ் பாடல் 'அழகிய லைலா' வந்தது பெரிய அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நிகிலா விமல் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், மாரி செல்வராஜின் கர்ணன் படத்தில் இடம்பெற்ற 'தட்டான் தட்டான்' பாடலில் தனுஷ் ரஜிஷா விஜயனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் இருந்தது.
நான் அந்த முத்தத்துக்கு டப் செய்யும் கொண்டு இருக்கும் போது, நீங்க வெரைட்டியா முத்தம் கொடுங்க" என்று மாரி செல்வராஜ் கூறினார்.அதனை அடுத்து கையில் ஒவ்வொரு இடத்திலும் வைத்து முத்தம் கொடுத்த சத்தங்களை டப் செய்து முடித்தோம் என்று நிகிலா விமல் கூறியுள்ளார்.