விலகிய உலக நாயகன்!! பிக்பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகராக இருக்கலாம்?
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 7 ஆண்டுகளாக 7 சீசனை கடந்து உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீசன் 8 துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆவலுடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியுள்ளேன் என்றும் இனிமேல் நான் இல்லை என்றும் கமல் ஹாசன் ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை கூறியிருக்கிறார்.
படங்களில் கால்ஷீட் கமிட்மெண்ட்ஸ்-ஆல் வரும் பிக்பாஸ் சீசனில் பங்கேற்க முடியவில்லை என்ற காரணத்தையும் விஜய் டிவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குழுவினருக்கும் என் நன்றிகள் என்றும் தெரிவித்திருக்கிறார் கமல் ஹாசன். இந்நிலையில் அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. சில நடிகை நயன் தாரா என்றும் நடிகை ராதிகா என்றும் கூறினார்கள்.
மறுபக்கம் ஏற்கனவே தொகுத்து வழங்கிய நடிகர் சிம்புவாக இருக்கலாம் என்றும் நடிகர் சரத்குமாராக இருக்கலாம் என்றும் கூறி வந்தனர். தற்போது பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், அப்படிப்பட்ட மகா கலைஞன் கமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சி முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலபேரை கமல் வேறுவிதமாக நடத்தியது. அவரின் முடிவை பலரும் கிண்டல் செய்தனர். அதில் முக்கியமாக பிரதீப் ஆண்டனியின் விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விஷயத்தால் கமல் ஹாசனை ரசிகர்கள் கண்டபடி திட்டினார்கள்.
அப்படி அவரை பேசும்போது எனக்கு வறுத்தமாக தான் இருக்கிறது. யாருமே நினைத்து பார்க்காத அளவிற்கு சம்பளம் கமல் ஹாசனுக்கு கொடுக்கப்பட்டது. இடையில் மாயாவுக்கு கமலுக்குமான தொடர்பை தவறாக பேசினார்கள். அவரை யாரும் பிக்பாஸில் இருந்து வெளியேற்ற முடியாது. மேடையில் கமல் ஹாசன் வந்து நிற்கும் போது, போட்டியாளர்கள் எழுந்து நிற்கும் போது கொடுக்கும் மரியாதை தான் அந்த நிகழ்ச்சியின் வெற்றி.
நாளை அவர் இடத்தில் வேறொருவர் வந்தால் இது நடக்குமா என்று தெரியாது. தக் லைஃப் படத்தில் நடித்துவிட்டு, அமெரிக்காவிற்கு சென்று AI தொழில்நுட்பத்தை பற்றி படிக்க 6 மாதத்திற்கு செல்கிறார். கமல் ஹாசன் இடத்திற்கு யார் வரப்போகிறார்கள் என்று ஓட்டெடுப்பு நடந்தது. அவரின் இடத்தினை பிடிக்க யாரும் இல்லை என்ற முடிவு வந்திருக்கிறதாம். எனக்கு சில ஐடியாக்கள் வந்ததில், இயக்குனர் ஒருவரின் நியாபகம் வந்தது.
பார்த்திபன் மாதிரியான ஒருவர் வந்தால் ஸ்வாரஷ்மாக இருக்கும். மார்க்கெட் அதிகமாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களை சமாளிக்கும் திறமை இருக்கிறது. இவர்கள் தவிர சிம்புவாக இருந்தால் அவ்வளவு திறமையாக கொண்டு செல்வாரா என்ற கேள்வி எனக்கு எழுகிறது என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.