கன்றாவி.. கண்ணு கூசுது.. படு மோசமான படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் வனிதா! மகளுடன் பண்ற வேலையா இது?
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையும், ‘பிக் பாஸ்’ புகழுமான வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ‘Mrs & Mr’ திரைப்படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற ஒரு படுக்கையறை காட்சி இணையத்தில் வைரலாகி, கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்த இந்தப் படத்தில், வனிதா மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
40 வயதைக் கடந்த ஒரு பெண்ணின் திருமணம் மற்றும் குழந்தை பெறுதல் குறித்த சமூக அழுத்தங்களை ஆராயும் இந்தப் படம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய படுக்கையறை காட்சி, “வனிதா இப்படியொரு காட்சியில் நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது; அவரது மகள் தயாரித்த படத்தில் இது தேவையா?” என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், வனிதாவின் தைரியமான முயற்சியை சிலர் பாராட்ட, பலர் இந்தக் காட்சியை அநாவசியமென விமர்சித்து வருகின்றனர்.
படத்தின் டிரெய்லர் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சர்ச்சை படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது