ஒரு சூப்பர் ஸ்டார் படத்துக்கே 500 டிக்கெட் தான் புக் ஆகிருக்கா.. ஷாக் ஆகிய திரையுலகம்
சினிமாவை பொறுத்தவரை தற்பொதெல்லாம் ப்ரீ புக்கிங் என்பது மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. அதிலும் விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ ஆனால், முதல் நாள் வசூல் எப்படியும் 50 கோடி தாண்டிரும், முதல் வாரத்திலேயே 100 கோடி வந்துவிடும்.
அதிலும் லியோ முதல் நாளே 140 கோடி வசூல் வந்தது. தற்போது கூட இந்தியன் 2 உலகம் முழுவதும் முன் பதிவு ரூ 12 கோடியை தாண்டிவிட்டது.
அதே நேரத்தில் இந்தியனுடன் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் சூரரை போற்று ஹிந்தி ரீமேக் படமான சர்ஃபிரா, இப்போது வரை வெறும் 500 பேர் தான் புக் செய்து இருக்கிறார்களாம். இதை கண்ட ஒட்டு மொத்த பாலிவுட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.