பகலில் ஒரு மாதிரி.. ராத்திரி வேற மாதிரி.. ஹனிமூனில் கணவரால் ஷாக்கான நடிகை.. கிளம்பிய பிரச்னை..

பகலில் ஒரு மாதிரி.. ராத்திரி வேற மாதிரி.. ஹனிமூனில் கணவரால் ஷாக்கான நடிகை.. கிளம்பிய பிரச்னை..

சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார் அந்த நடிகை. பல பிரமாண்ட படங்களின் வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டு; ஒருவழியாக ஒரு இயக்குநரின் முதல் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு பாம்பு நடிகரோடு காதல் கிசுகிசு கிளம்பிய சூழலில் அண்மையில் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனுக்கும் சென்றார்கள் அவர்கள்.

வாரிசு நடிகை என்று பெயர் எடுத்தவர்தான் அவர். அதேசமயம் அவரது குடும்பம் ஆரம்பகாலத்தில் பயங்கர கஷ்டங்களை எல்லாம் அனுபவித்திருக்கிறது. இதனால் வறுமை என்றால் என்று அவருக்கு நன்றாகவே தெரிந்தது. ஒருவழியாக நடிகையின் வீட்டிலிருந்து ஃபேமஸான ஸ்டார் உருவானதை அடுத்து அம்மணிக்கும் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. ஆனால் வீட்டில் இருந்த இன்னொரு ஸ்டார் அம்மணியை நடிக்கவிடவில்லை . அதன் காரணமாக சில மெகா ஹிட் படங்களை தவறவிட்டார் நடிகை.

பிறகு ஒருவழியாக அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைத்ததை அடுத்து முன்னணி நடிகரோடு ஜோடி போட்டு அறிமுகமானார். அதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் ஃபேமஸ் நடிகர் ஒருவரோடு காதல் கிசுகிசு கிளம்பியது. முக்கியமாக இரண்டு பேருக்கும் திருமணம் என்றும் அடித்து கூறப்பட்டது. ஆனால் இண்டஸ்ட்ரியில் நடந்த சில பிரச்னைகளால் இருவரது காதலும் பாதியிலேயே முறிந்துபோனது.

காதல் முறிவுக்கு பிறகு முரட்டு சிங்கிளாக வாழ்ந்துவந்த நடிகை;இன்னொருவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து 100 கோடி ரூபாய்வரை செலவு செய்தார்களாம். படு பிரமாண்டமாக திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் திருமணத்தில் ஆஜராகி குத்தாட்டம் போட்டுவிட்டு சென்றனர்.

திருமணத்தை நல்லபடியாக முடித்த கையோடு புதுமண தம்பதி ஹனிமூன் சென்றது. அங்குதான் நடிகைக்கு படு ட்விஸ்ட் இருந்ததாம். அதாவது காதல் கணவர் பகலில் எல்லாம் படு ரொமான்ஸ் மூடில் இருந்துகொண்டு நடிகையை தாங்கு தாங்கு என்று தாங்கினாராம். வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் காதல் வழிந்து ஓடியதாம். ஆனால் இரவில் கணவரின் செயல்பாடு முரட்டுத்தனமாக இருந்ததாம்.

எடுத்ததுக்கு எல்லாம் எரிந்து எரிந்து விழுந்தாராம் கணவர். முக்கியமாக உடல் களைப்பையும் பொருட்படுத்தாமல் இரவு முழுக்க எதை எதையோ செய்துகொண்டிருந்தாராம். நடிகையும் தன்னால் முடிந்த அளவுக்கு அட்ஜெஸ்ட் செய்துகொண்டாராம். ஒருகட்டத்தில் பொறுக்க முடியாத அம்மணி, ஹனிமூனை கேன்சல் செய்துவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டாராம். காதல் கணவர் எவ்வளவு கெஞ்சியும் அம்மணி கேட்கவே இல்லையாம். வேறு வழியே இல்லாமல் காதல் கணவரும் இங்கு வந்துவிட; தனது நெருக்கமான வட்டாரத்தை அழைத்து மது விருந்து கொடுத்து பஞ்சாயத்து வைத்தாராம் நடிகை. அந்த பஞ்சாயத்தில் இனிமேல் இப்படி முரட்டுத்தனமாக நடந்துகொள்ளமாட்டேன் என்று காதல் கணவர் உறுதி அளித்ததும்தான் நடிகைக்கும், அவரது வீட்டாருக்கும் நிம்மதி கிடைத்ததாக கிசுசிசுக்கப்படுகிறது.

LATEST News

Trending News