அந்த இயக்குனருக்காக தான் வந்தேன், நயன்தாராவ இப்படி, அதிர்ச்சியில் கோலிவுட்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொடி கட்டி பறந்த நடிகை நயன்தாரா. ஆனால், எப்போது இவருக்கு குழந்தை பிறந்ததோ அப்போதே நடிப்பதில் பெரிதும் கவனம் செல்லுத்தவில்லை.
தன் குடும்பம் குழந்தைகள் என்றே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தான் நடிக்கும் படத்திற்கு கூட ப்ரோமோஷன் வரமாட்டார். ஆனால், சொந்த தயாரிப்பு படம் என்றால் வருவார் என்று ஒரு பேச்சு உள்ளது.
தற்போது தனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு படத்தின் விழாவிற்கு இவர் வந்ததை பார்த்து கோலிவுட்டே அதிர்ச்சி ஆகியுள்ளது. அது வேறு எந்த படமும் இல்லை விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா படம் தான்.
ஆனால், இதுக்குறித்து நயன்தாராவே, விஷ்ணுவர்தன் என் நண்பர் அவருக்காக தான் வந்தேன் என கூறிவிட்டார். இதை கேட்ட பலரும் இப்படியே தன் படத்திற்கும் வந்தால் நல்லது என்று கூறி சென்றனர்.