ரஜினிக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான் செட் ஆகும்!! சர்ச்சையை ஏற்படுத்தி நடிகர் மன்சூர் அலிகான்...

ரஜினிக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான் செட் ஆகும்!! சர்ச்சையை ஏற்படுத்தி நடிகர் மன்சூர் அலிகான்...

நடிகர் மன்சூர் அலிகான் பேட்டிக்கொடுத்தாலோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேடையில் பேசினாலும் சர்ச்சையில் தான் முடியும். அப்படி சமீபகாலமாக அவர் பேசும் விஷயம் மிகப்பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடிகை திரிஷாவை பற்றி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ஒரு விழாவில் கலந்து கொண்டு பேஇய மன்சூர் அலிகான், ரஜினிக்கு 70, 80 வயது ஆகிவிட்டது என்றும் அதனால் அவருக்கு ஹீரோயின் தேடுவதே கஷ்டம்தான்.

ஒன்னு, அடுத்தவன் பொண்டாட்டியா இருக்க வேண்டும். அதாவது 20, 25 வயதில் இருக்கும் ஒருவரை அவருக்கு ஹீரோயினாக போடமுடியாது. திருமணமான நடிகைகள் தான் ரஜினிக்கு செட் ஆவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

யாரும் தவறாக நினைக்க வேண்டாம் உதாரணமாக ஐஸ்வர்யா ராயை எடுத்துக்கொள்ளலாம். அவருக்கும் இப்போது வயதாகிவிட்டதே. தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் கொட்டி அவர்களை தேடித்தான் செல்கிறார்கள்.

இப்படியே போகும்பட்சத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாகிவிடும் என்றும் சின்ன படம் என்று பார்க்காமல் உள்ளே இருக்கும் கதையை பாருங்கள் என்றும் மன்சூர் அலிகான் பேசியிருக்கிறார். இதற்கு பலர் ஆதரவாகவும் எதிர்த்தும் சில கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES