2ம் திருமணத்திற்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! அந்த இயக்குனர் தான் மாப்பிள்ளையா..
கடந்த 2004 -ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.
சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை 2022 -ம் ஆண்டில் பிரிவு ஏற்பட்டது.சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 2-ஆவது திருமணம் குறித்த வதந்தி சமூக வலைத்தளத்தில் வட்டமிட துவங்கியுள்ளது. ஐஸ்வர்யாவின் வீட்டில் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும் இதனால் தான் விவாகரத்து விவாகரத்து பெறுவதில் ஐஸ்வர்யா அவசரம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
ஐஸ்வர்யா துணை இயக்குனருடன் ஒருவரோடு பழகி வருவதாக யாரோ கொளுத்தி போட தற்போது அந்த வதந்தி காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த மாதிரி பரவும் செய்தியில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால் முழுக்க முழுக்க வதந்தியாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.