இதுவே கடைசி படம்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்கும் கொண்டையை மறைக்கும் மாஸ் நடிகர்!
மாஸ் நடிகர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை எப்படியாவது ஓட வைத்து விட வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் எனக் கூறுகின்றனர். அந்த இயக்குநர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் சொதப்பி வந்தாலும், ஏற்கனவே கொடுத்த வாக்கு காரணமாக அவருடன் இணைந்து நடித்து வருகிறார் மாஸ் நடிகர்.
கடைசியாக மாஸ் நடிகர் நடிப்பில் வெளியான 3 படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இந்த படத்தையே கடைசி படமாக மாற்றி புரமோட் செய்து பில்டப் பண்ணினால் ரசிகர்களின் மொத்த கூட்டத்தையும் தியேட்டருக்கு வரவழைத்து விடலாம் என்கிற மன கணக்கை மாஸ் நடிகர் போட்டு வருவதாக கூறுகின்றனர்.
தயாரிப்பு தரப்புக்கும் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏற்கனவே வாக்கு கொடுத்த தயாரிப்பாளருக்கு படம் பண்ணப் போவதில்லை என மாஸ் நடிகர் விலகி விட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இதற்கு மேல் அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சினிமாவில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அடுத்த கட்டத்துக்கு எப்படியாவது இதே கெத்தை வைத்து நகர்ந்து சென்று விட வேண்டும் என மாஸ் நடிகர் பக்கா பிளான் போட்டுத்தான் அந்த களத்தில் கால் வைத்திருக்கிறார் என்கின்றனர். ஆனால், கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியாக இருக்கும் என மாஸ் நடிகர் நினைக்கவில்லை. திடீரென அவரது அடுத்த கட்ட திட்டங்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகி வரும் நிலையில், அடுத்த படத்தையாவது குறைந்த பட்சம் வெற்றிப் படமாக மாற்றி விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருவதாக கூறுகின்றனர்.
இன்றே கடைசி என போர்டு வைத்தால் மக்கள் எப்படி அடித்து பிடித்துக் கொண்டு வாங்கி விடுவார்களோ அதே யுக்தியை பின் பற்றி இதுதான் தனது கடைசி படம் போல பில்டப் செய்ய தனது டீமிடம் நடிகர் சொல்லியிருப்பதாகவும் அதன் காரணமாகவே ஏகப்பட்ட வதந்திகள் ஊருக்குள் உலாவி வருவதாக கூறுகின்றனர்.
ஆனால், கன்னட தயாரிப்பு நிறுவனம் நடிகரின் இந்த திட்டம் பற்றி எல்லாம் தெரியாமல், உறுதியாக அடுத்த படத்தை நம்ம பேனரில் தான் மாஸ் நடிகர் பண்ணப் போகிறார் என்பதை சினிமா வட்டாரத்தில் பரப்பி விட மாஸ் நடிகர் மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டோமே என அப்செட்டாகி உள்ளாராம்.