பகத் பாசில் வீட்டில் அந்த மாதிரி இருப்பாரு, பயமா இருக்கும்!! நஸ்ரியா சொன்ன ஷாக்கிங் தகவல்..
வில்லன், ஹீரோ, காமெடி என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்ளை கவர்ந்து வருபவர் தான் ஃபஹத் பாசில். இவர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், வேலைக்காரன் மாமன்னன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஆவேசம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பகத் பாசிலின் மனைவியும், நடிகையுமான நஸ்ரியா, பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதில் அவர், திருமணமான புதிதில் பகத் பாசில் நடவடிக்கைகளை பார்த்து பயந்தேன். ஏன் என்றால் அவர் ஒரு படத்தில் நடித்துவிட்டு அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து கொண்டு இருப்பார்.பாத்ரூமில் சத்தம் போட்டு கத்துவார், சிரிப்பார். இப்போது எல்லாமே பழகிவிட்டது என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார்.