பாத்ரூம் இல்லாமல் கடைசியா அங்க தான் போனேன்!! கூச்சமில்லாமல் பதிலளித்த நடிகை காஜல் அகர்வால்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால், சில ஆண்டுகளுக்கு முன் தன் நீண்ட நாள் நண்பர் கெளதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஆண் குழந்தையை பெற்று வளர்த்து வந்த காஜல், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
தற்போது பாரிஸ் பாரிஸ், மதகராஜா, பார்ட்டி போன்ற படங்களில் கிடப்பில் இருந்து வரும் நிலையில், காஜல் நடிப்பில் சதயபாமா என்ற படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள சத்யபாமா படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார் நடிகை காஜல்.
அந்த பேட்டியில். சமீபத்தில் அளித்த பேட்டியில், வெளியிடங்களில் பாத்ரூம் விஷயத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவத்தை பற்றிய கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
ஜோர்டன் நாட்டில் உலகின் முக்கிய அதிசயங்களில் ஒன்றான பெட்ராவில் பாடல் காட்சியின் ஷூட்டிங் நடந்தது. அந்த இடத்தில் பாத்ரூம் எதுவும் இல்லை, ஷூட்டிங்கில் இருந்து அது தொலைவாக இருந்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வந்தது. நான் என்ன செய்வது, அங்கிருந்த ஒரு கல்லறையில் இயற்கை உபாதையை கழித்தேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்
பல நடிகைகளும் இதுபோல் வெளி இடங்களுக்கு ஷூட்டிங் செல்லும் போது பாத்ரூம் வசதி இல்லை என்று கூறி வரும் நிலையில் டாப் நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.