கழட்டி விட்ட காதலன்.. தயாரிப்பாளரை நம்பி ஏமாந்த நடிகை!

கழட்டி விட்ட காதலன்.. தயாரிப்பாளரை நம்பி ஏமாந்த நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் அந்த நான்கு எழுத்து நடிகை, நம்பி வந்த காதலன் கைவிரித்துவிட்டதால், தயாரிப்பாளரிடம் அடைக்கலம் புகுந்தார். அப்போது அவரும் குடைச்சல் கொடுப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் கேரவனில் கதறி அழுது வருகிறாராம்.

மாநிற தேகம் கொண்ட அந்த நான்கு எழுத்து நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர். இவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு சர்ச்சையில் இவரது பெயர் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும்.

முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த, நான்கு எழுந்து நடிகைக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்து போனதால், கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து, ஒரு சில படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி நடித்தார். அப்போது, வளர்ந்து வரும் நடிகர் ஒருவரின் படத்தில் சேர்ந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. இதனால், பல இடங்களில் இருவரும் ஜோடிப்புறவாக சுற்றி வந்தனர். இது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். ஆனால், திருமணத்திற்கு நடிகையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நான்கு எழுத்து நடிகை குடும்பத்தின் சம்மதத்திற்காக மிகவும் போராடினார். ஆனால், குடும்பம் நோ சொல்லிவிட்டதால், குடும்பத்தை விட்டு பிரிந்து, யாருக்கும் தெரியாமல் நடிகருடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்த தொடங்கினார்.

நம்பி வந்த காதலனோ, சினிமாவில் நடிக்கக்கூடாது, கவர்ச்சி ஆட்டம் போடக்கூடாது என கட்டளை போட, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். மேலும், காதலனிடம் எவ்வளவு சொல்லியும் படத்தில் நடிக்க சம்மதிக்காததால், நான்கு எழுத்து நடிகை ஒரு கட்டத்தில் சினமாவே வேண்டாம் என்று சினிமாவை விட்டே விலகிவிட்டார். நடிகைக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தாராளமாக செலவு செய்து பழகிய நடிகைககு காதலனிடம் கைநீட்ட மனம் வராததால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் உதவியுடன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

நான்கு எழுத்து நடிகைக்கு முன்பைவிட படவாய்ப்பு இல்லை என்றாலும், தயாரிப்பாளரின் தயவால் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நான்கு எழுத்து நடிகை வெப் தொடரில் வரம்பு மீறி கவர்ச்சிகாட்டி வருகிறார். அண்மையில் வெளியான ஒரு வெப் தொடரில் படுக்கை அறைக் காட்சியில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

கணிசமான படங்களில் நடித்து வரும், அந்த நான்கு எழுத்து நடிகைக்கு, வாழ்வு கொடுத்த தயாரிப்பாளர் தற்போது குடைச்சல் கொடுப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். தயாரிப்பாளரோ தெலுங்கு சினிமாவில் வெயிட்டான கை என்பதால், எதுவுமே சொல்ல முடியாமல் கேரவனில் கதறி அழுது வருகிறாராம் அந்த நான்கு எழுத்து நடிகை.

LATEST News

Trending News

HOT GALLERIES