இளம் நடிகரை வளைத்து போட்ட முத்தின கத்திரிக்காய்.. நடிகையின் மயக்கத்தில் மொத்தத்தையும் இழந்த ஹீரோ
சிறுவயதில் இருந்து நடித்து வந்த அந்த ஹீரோ எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்தி விடுவார். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்லாமல் வில்லன், குணச்சித்திரம் அவ்வளவு ஏன் அப்பா கேரக்டரில் கூட நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இதெல்லாம் போர் அடிக்கவே தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகளை ஏற்க ஆரம்பித்தார். அதுவும் அவருக்கு நன்றாக கை கொடுத்தது.
திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை நடிகர் இருக்கும் இடம் தெரியாமல் போனார். பலரும் அது பற்றி கேட்டு வந்த நிலையில் ஒரு விருது விழாவுக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனாலும் நடிகரை அதன் பிறகு யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் நடிகர் முத்தின கத்திரிக்காய் நடிகை ஒருவரின் மயக்கத்தில் இருப்பது தான்.
நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலி செய்து வந்த நடிகர் இப்போதும் அந்த நடிகையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். அந்த நடிகையோ ஹீரோவின் தேதிகள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பார்த்து வந்தார்.
அதேபோல் சம்பள விவகாரத்திலும் அவர்தான் முடிவெடுப்பார். இப்படி அனைத்தும் அந்த நடிகையின் கைக்கு வந்ததில் பல இயக்குனர்களால் நடிகரை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது.
அதனாலேயே மார்க்கெட் இழந்த நடிகர் இப்போது சொந்த தொழிலில் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நடிகையின் மயக்கத்தில் நல்ல வாய்ப்பை எல்லாம் கெடுத்துக் கொண்டாரே என்ற கவலை ரசிகர்களுக்கு இருக்கிறது.