மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா: வெளியே கசிந்த ரகசியம்
விவாகரத்து பெறப்போவதாக பிரிந்திருக்கும் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ்-க்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும், தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்ததாகவும் பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.
எனினும் இருவரும் தங்களது பிள்ளைகளின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டனர், பள்ளி நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சென்ற புகைப்படங்களும் வெளியாகின.
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் ஒன்றுசேர முடிவெடுத்துள்ளதாக திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும் அவர், மகளின் விவாகரத்து முடிவால் ரஜினிகாந்தும் அவரது மனைவியும் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.
மகள்- மருமகனை மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சித்தனர், தங்களது மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது, விரைவில் தெரியவரும் என கூறியுள்ளார்.