“அவனுக்கு சாவு எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” பிரபல நடிகர் குறித்து ரேகா நாயர் தடாலடி..
முகநூலில் வந்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசுபவர் ரேகா நாயர். அதுவும் அந்தரங்கமான விஷயங்களை பற்றி அப்படியே அப்பட்டமாக பேசிய வகையில், சமூக வலைதளங்களில் சற்று கவனிக்கப்படும் பிரபலமாக துவக்கத்தில் இருந்தார்.
அவர் சற்று கவர்ச்சியான ஆடைகளில் அவ்வப்போது முகநூலில் தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
குறிப்பாக பெண்களின் அந்தரங்க விஷயங்கள், ஆண்கள் கள்ளத்தொடர்பு விஷயங்களை பற்றியும் ரேகா நாயர் வெளிப்படையாக பேசினார்.
நடிகைகள் குறித்த கிசுகிசுக்கள் குறித்தும் வெளிப்படையாக அவர்களுக்கு ஆதரவாக பேசி, பலரது கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த, இரவின் நிழல் என்ற படத்தில், சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்திருந்தார். உடலில் ஆடை அணியாமல் அவர் நடித்தது, பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை, அவர்களது பின்னணி மர்மங்களை நேர்காணல் வாயிலாக ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுபவர் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
இரவின் நிழல் படம் குறித்து பேசிய அவர், அந்த படத்தில் ஆடையின்றி நடித்த ரேகா நாயர் குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்தார். இதையடுத்து, கடற்கரையில் வாக்கிங் சென்ற அவரை வழிமறித்த ரேகா நாயர், கண்டபடி திட்டி சண்டையிட்டார்.
பதிலுக்கு பயில்வான் ரங்கநாதனும் ரேகா நாயரை திட்டினார். பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கறே, அதை சுட்டிக் காட்டி பேசினால் உனக்கு ஏன் கோபம் வருகிறது.
உன் லட்சணத்தை வெளியே சொன்னால் உன்னால் தாங்க முடியவில்லையா என்றும் பதிலடி கொடுத்தார்.
பயில்வான் ரங்கநாதனும், ரேகா நாயர் கடற்கரையில் கடுமையாக வாக்குவாதம் செய்து, சண்டையிட்டுக்கொண்ட அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அவ்வப்போது நேர்காணலில் கலந்துக்கொள்ளும் நடிகை ரேகா நாயர் பயில்வான் ரங்கதான் குறித்து, விமர்சித்து பேசுவார். அவர் இறந்தால் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரேகா நாயர், ஏற்கனவே சொல்லிட்டேன். அந்த ஆள் எப்போடா சாவான்னு காத்திட்டு இருக்கேன்.
மாரிமுத்து சார் இறந்ததுக்கு சொன்னாரு, அவரு எல்லா பொம்பளைங்க வாயிலேயும் விழுந்தாரு அப்படீன்னு. இந்தாளு என்ன, தெய்வங்க வாயிலேயே விழுந்துட்டு இருக்காரு.
இதை கேட்கணுமுன்னு எனக்கு அப்பவே தோணுச்சு. இருந்தாலும் அப்ப கண்ட்ரோல், கண்ட்ரோல்ன்னு எதுவும் பேசாமல் இருந்துட்டேன் என்று அந்த நேர்காணலில் ரேகா நாயர் கூறியிருக்கிறார்.
பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் குறித்து, அவனுக்கு சாவு எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. என்று, ரேகா நாயர் தடாலடியாக கூறியிருப்பது வைரலாகி வருகிறது.