ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாள்..மனைவி சங்கீதா போட்ட எமோஷனல் போஸ்ட்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கொமடி நடிகராக இருப்பவர் தான் ரெடின் பிங்ஸ்லி. இவர் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து இரு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நிலையில், தொடர்ந்து தனது யதார்த்தமான நடிப்பினால் பல படங்களில் நடித்ததுடன், ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில், கணவருக்காக சங்கீதா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
தற்போது மாலத்தீவு, துபாய் என்று ஹனிமூன் சென்றுள்ள இந்த தம்பதிகள் பின்பு பிரம்மாண்டமாக வரவேற்பு வைக்க உள்ளார்களாம்.
சங்கீதா கிரிஷ் என்பவரைக் ஏற்கனவே திருமணம் செய்துள்ளார் என்றும் இந்தத் திருமணம் இரண்டாவது திருமணம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு தம்பதிகள் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.
இதற்கிடையே சங்கீதா சிறுமி ஒருவருடன் எடுத்து்ககொண்ட புகைப்படம் வெளியான நிலையில் அது அவரின் மகளா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தனது கணவர் கிங்ஸ்லி பிறந்த தினம் என்பதால், அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பின்பு என்னுடைய மிகச்சிறந்த பாதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ஒரு கணவராக நீங்கள் கொடுக்கும் பாசத்தையும், அன்பையும் என்னால் என்றும் மறக்க முடியாது.
பல பிறந்தநாளை இவ்வாறு கொண்டாட வேண்டும்... எனது அன்பு அமைதி அனைத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.