காதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை..! அதுவும் இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா?

காதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை..! அதுவும் இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா?

வாணி ராணி, ரன் உள்ளிட்ட சன் டிவி சீரியல்கள் மற்றும் பிரபல தெலுங்கு சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நவ்யா சுவாமி.

இந்நிலையில் இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான ரவி கிருஷ்ணா என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்க படுகிறது.

 

மேலும் இவர்கள் இருவரும் ஜோடியாக தற்போது நடித்து வரும் அமெ கதா என்ற சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் சமீபத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அப்போது இருவரும் காதலை சொல்லும் தருணம் தத்ரூபமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே இவர்கள் இருவரை பற்றின காதல் செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது, ஆனால் தற்போது வரை இவர்கள் இது குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


LATEST News

Trending News