நடுக்கடலில் நடந்த திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை! இப்படியொரு பதிவிற்கு என்ன காரணம்...
நடிகை ஷீலா ராஜகுமார் அவரின் விவாகரத்து தொடர்பில் போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் அழகை தாண்டியும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் நடிகை ஷீலா ராஜகுமார்.
இவர் நடிப்பில் ஜிகர்தண்டா 2, பிச்சைக்காரன் 2, ஜோதி, நூடுல்ஸ் ஆகிய படங்களில் வெளியாகியிருக்கின்றன.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை இவர்.
சினிமாவிற்குள் வர முன்னர் குறும்படமொன்றில் நடித்துள்ளார் அந்த படத்தில் நடிக்கும் பொழுது தம்பி சோழர் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் காதல் விவகாரத்தை இருவரின் வீட்டாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தனியாக வந்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதுவும் கடலுக்கு நடுவே வித்தியாசமான முறையில் இவர்களது திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகை ஷீலா விவாகரத்து என சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் பல எதிர்ப்புக்களை மீறி திருமணம் செய்து கொண்ட ஜோடி திடீரென விவாகரத்து செய்வதற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.