மூத்த நடிகை சுப்பலட்சுமி காலமானார் - சோகத்தில் திரையுலகம்
மலையாள மொழி மட்டுமல்லாமல் பல தமிழ் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஆர்.சுப்பலட்சுமி 87 வயதாகும் நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நேற்று இரவு கொச்சியில் காலமானார்.
சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், அவர் ஒரு சிறந்த படகியாகவும் திகழ்ந்து வந்துள்ளார். சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளரான இவர், பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த நந்தனம் படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார்.
அப்போது அவருக்கு வயது 66 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கல்யாணராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, பாண்டிப்படா, ராணி பத்மினி மற்றும் பல வெற்றிப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
அதே போல மலையாளம் மட்டும் இல்லாமல் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில், பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
சுப்பலட்சுமி தொலைக்காட்சி நடிகராகவும் இருந்தார், பல சேனல்களில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.
2002ம் ஆண்டு வெளியான ஒரு விளம்பர படம் தான் அவர் நந்தனம் திரைப்படத்தில் இணைய அவருக்கு வாய்ப்பளித்தது என்றே கூறலாம்.அதே போல இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.