தப்பு பண்லனா எதுக்கு மன்னிப்பு கேட்கனும் –பிரதீப்பை சாடிய ஐசுவிற்கு பதிலடிக் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்!
"தப்பு பண்லனா எதுக்கு மன்னிப்பு கேட்கனும்” என மன்னிப்பு கேட்ட ஐடிவியை சரமாறியாக சனம் செட்டி சாடி வருகிறார்.
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரங்களில் ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீடு உட்பட சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் பிக்பாஸ் பிரதீப் வெளியில் வருவதற்கு காரணமாக இருந்த ஐசு தற்போது மன்னிப்பு கேட்டு கடிதமொன்றை பகிர்ந்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை சனம் ஷெட்டி அவர்கள், “ பிரதீப் உங்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வாரா? அப்படி இருந்தால் அவரது மன்னிப்பிற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
இல்லையென்றால் இது பொது மக்களிடம் இருந்து தப்பிக்கும் ஒரு மன்னிப்பாகவே தோன்றுகிறது. ஆனால் ஏன் நீங்கள் பிரதிபடன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவர் மீது குற்றம் சாட்டியதற்கு ஆதாரம் இல்லை என்றால் ஏன் இப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். ஏன் அவரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நபராக கூற வேண்டும்.” கடுமையாக கொந்தளித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பி வருகின்றது.