ரெட் கார்டு வாங்கி சென்ற பிரதீப் அடுத்து என்ன செய்யப் போகிறார்... அவரே வெளியிட்ட அடுத்த பதிவு..

ரெட் கார்டு வாங்கி சென்ற பிரதீப் அடுத்து என்ன செய்யப் போகிறார்... அவரே வெளியிட்ட அடுத்த பதிவு..

பிக் பாஸிலிருந்து வெளியேறிய பிரதீப் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை தனது அடுத்த பதிவில் வெளியிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி ஆகிய 6 பேரும், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப்பும் வெளியேற்றப்பட்டார். 

பிரதீப்பின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நெட்டிசன்கள் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவருக்கு ஆதரவாக பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிரதீப், தான் பிக் பாஸில் வாங்கிய ட்ராஃபி என்று பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தது வைரலாகியது.

ரெட் கார்டு வாங்கி சென்ற பிரதீப் அடுத்து என்ன செய்யப் போகிறார்? அவரே வெளியிட்ட அடுத்த பதிவு | Bigg Boss Red Card Pradeep Next Act In Movie

இந்நிலையில் தற்போது மற்றொரு கொமடி காணொளி ஒன்றினை வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது இவரது விளையாட்டை சமூகவலைத்தளங்கள் எவ்வாறு பார்க்கின்றது என்றும் தன்னுடன் நின்றதற்கு நன்றி... என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல ஆர்ட்டிஸ்ட் ஆக ட்ரை பண்றேன்... என்று தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News