DD Returns திரை விமர்சனம்.
தமிழ் சினிமாவில் பேய் ஜானர்களுக்கு மட்டும் எப்போதும் ஒரு மவுசு இருக்கும், அதிலும் ஒரு படம் ஹிட் ஆனால், முனி 24 (காஞ்சனா 25) என வந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் சந்தானம் கையில் கிடைத்திருக்கும் பேய் காமெடி ஜானர் தான் தில்லுக்கு துட்டு, இந்த சீரியஸின் 3வது படமாக dd returns வெளிவந்துள்ளது, எப்படி என்பதை பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் சூதாட்டத்தில் தோறபவர்களை கொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளது ஒரு குடும்பம், அந்த குடும்பத்தையே ஊர் மக்கள் எரித்து கொல்கின்றனர்.
அதன் பின் தற்போதுள்ள பாண்டிச்சேரியில் இருக்கும் சந்தானம் அண்ட் கோ பல கட்ட பிரச்சனைகளை சந்தித்து ஒரு தேவைகாக அந்த பேய் பங்களாவிற்குள் வருகின்றனர். அதன் பின் நடக்கும் அதிரி புதிரி காமெடி கலாட்டா தான் இந்த DD Returns.
சந்தானம் தன்னுடைய கிரவுண்ட் எது என்பதை நன்று அறிந்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கே உரிய ஸ்டைலில் ஒன் லைனில் அனல் பறக்கின்றார்.
அதிலும் இந்த கால வெப் சீரிஸ், ஊ சொல்றியா மாமா என ஒன்றையும் விட்டு வைக்க வில்லை, கலாய்த்து தள்ளுகின்றனர். இதற்கு பக்க பலமாக மாறன், ரெடின் கிங்ஸ்லீ, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் என பல நட்சத்திரங்கள் காமெடி அதகளம் தான்.
குறிப்பாக வீட்டிற்குள் சென்றவுடன் கேம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டி, வயிறு வலிக்கும் சிரித்தே, முதல் பாதி கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் சுமார் என்றாலும் இரண்டாம் பாதி சிரிப்பு சரவெடி.
க்ளாப்ஸ்
சந்தானம் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பு.
ஒன் லைனர் காமெடிகள் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
பல்ப்ஸ்
படத்தின் முதல் அரை மணி நேரம் கதைக்குள் செல்லும் வரை.
மொத்தத்தில் பேய் என்றாலே பயந்து ஓடும் கால கட்டத்தில் அதை கூப்பிட்டு வைத்து கலாய்த்து, நமக்கும் காமெடி விருந்து வைத்துள்ளனர்.