திருமணத்திற்கு தயாரான ஸ்ரீதிவ்யா : மாப்பிள்ளை யாரா இருக்கும்

திருமணத்திற்கு தயாரான ஸ்ரீதிவ்யா : மாப்பிள்ளை யாரா இருக்கும்

கோலிவுட் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்னர முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதிவ்யா. இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானாவில் பிறந்து வளர்ந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர், ஸ்ரீதிவ்யா. இவர், மூன்று வயதிலேயே நடிக்க வந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு வெளியான‘மனசாரா’எனும் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

திருமணத்திற்கு தயாரான ஸ்ரீதிவ்யா : மாப்பிள்ளை யாரா இருக்கும்? | Actress Sri Divya To Get Married Soon

அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

நடிகை ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்கள் திருமணம்  காதல் திருமணமாக இருக்குமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்குமா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு தயாரான ஸ்ரீதிவ்யா : மாப்பிள்ளை யாரா இருக்கும்? | Actress Sri Divya To Get Married Soonஅதற்கு ஸ்ரீதிவ்யா, கண்டிப்பாக தன்னுடைய திருமணம் காதல் திருமணமாகதான் இருக்கும் என்றும் நிச்சயமாக எனது காதலரைதான் கரம் பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனால், திருமணம் குறித்த அறிவிப்பினை இவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை, ஒரு சில கதாநாயகிகள் சில வருடங்கள் மட்டும்தான் மார்கெட்டில் இருப்பார்கள் ஆனால் இருக்கும் வரை அவர்களது மார்கெட் டாப்பில்தான் இருக்கும். அப்படிப்பட்ட கதாநாயகிகளுள் ஒருவர் தான் ஸ்ரீதிவ்யா. 

திருமணத்திற்கு தயாரான ஸ்ரீதிவ்யா : மாப்பிள்ளை யாரா இருக்கும்? | Actress Sri Divya To Get Married Soon

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானார். மீண்டும் காக்கி சட்டை படத்தில் இருவரும் கைக்காேர்த்தனர். ஆனால், இந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. சிவகார்த்திகேயனுக்காக ரெமோ படத்தில் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தமிழில் கடைசியாக 2017ஆம் ஆண்டு ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நன்றகாவே வரவேற்பினை பெற்றது. ஆனாலும் அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் ‘ரெய்டு’ எனும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES