32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் ஜொலித்த நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமலா பால்.

சிந்து சமவெளி அமலாபாலின் முதல் திரைப்படம், அதன்பிறகு மைனா திரைப்படம் அவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை அமலாபால் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ. எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தெய்வத் திருமகள், தலைவா என ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அமலாபால் நடித்திருந்தார்.

ஆடை பட சர்ச்சை, விவாகரத்து என பல பிரச்சனைகளுக்கு பிறகு நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் இருந்து அப்படியே ஒதுங்கிவிட்டார். தற்போது மறுமணத்திற்கு தயாராகியுள்ள நடிகை அமலாபால் தனது காதலன் யார் என்பதையும் அறிவித்துள்ளார்.

ஒரு படத்திற்கு சுமார் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் அமலாபால் தனது 32 வயதில் ரூ. 32 கோடி சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Amala Paul Net Worth Details

LATEST News

Trending News