டிரெண்ட்டி லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த இவர், பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சென்றார். ஆனால், அப்படம் படுதோல்வியை சந்தித்தது.
கீர்த்தியின் முதல் பாலிவுட் படம் தோல்வியை சந்தித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலரை கரம்பிடித்தார் கீர்த்தி. இவருடைய திருமணம் கோலாகலமாக நடந்தது.
இந்த நிலையில், திருமணத்திற்குபின் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் அட்டை விளம்பரத்திற்காக போட்டோஷூட் நடித்துள்ளார் கீர்த்தி. தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.