இந்த தமிழ் பிரபலங்கள் எல்லாம் சைவம் மட்டும் தான் சாப்பிடுவாங்க! யார் யார் தெரியுமா..
பொதுவாகவே சினிமா பிரபலங்கள் அவர்களின் உடல் எடை மற்றும் சரும அழகு குறித்து அதிக அக்கறை செலுத்துபவர்களாகவே இருக்கின்றனர். அந்தவகையில் அசைவத்தில் கை வைக்காத சினிமா பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்ககலாம்.
தமிழ் சினிமா துறையில் அழகிய தமிழ் மகன் சிவாஜி மற்றும் குட்டி போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஸ்ரேயா சரண் வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மாத்திரமே சாப்பிட விரும்புகிறாராம்.
அதுமட்டுமன்றி இவர் சைவ உணவுகளை மாத்திரமே உண்பவராம். சினிமா துறையில் புகழின் உச்சத்தில் இருக்கும் திரிஷாவை பற்றி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவுக்கு தனது அழகினாலும் நடிப்பு திறமையாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் திரிஷா. இவர் ஆர்கானிக் உணவுகளையும் வைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுவாராம்.
90களில் பிறந்த பெண்களின் ஆல் டைம் பேவரிட் தான் நடிகர் மாதவன் இவர் ரசிகர்களால் மேடி என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார். இவர் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சுத்தமான சைவ உணவை மாத்திரமே உண்பவர்.
தனது நிறத்தாலேயே ரசிகர்களை கிறங்கடிக்கும் தமன்னா சமீபத்தில் இருந்து சைவ உணவு உண்பவராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
தனது இயல்பான தோற்றத்தினால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகர் தனுஷ் வீட்டில் சமைக்கப்படும் இட்லி தோசை போன்ற உணவகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதுடன் இவரும் சைவ உணவை விரும்புகிறார்.
சமூக வவைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும் சமந்தா கோவிட் லாக்டவுன் காலத்தில் சைவ உணவு உண்பவராக மாறியுள்ளார். இதன் காரணமாக தனது வீட்டில் காய்கறிகளையும் வளர்க்கின்றாராம்.
மதராச பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரவேசித்த எமி ஜாக்ஷன் விலங்குகள் மீது கொண்டுள்ள நாட்டம் காரணமாக அசைவத்தை உண்ணாமல் தவிர்த்துவிட்டார்.
தமிழிலும் தெலுங்கிலும் பல ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால் தாவர உணவுகள் அதிகம் விரும்புகின்றாராம். பெண்கள் ரசிகர் பட்டாளத்தையே தன் பக்கம் வைத்திருக்கும் நடிகர் சூர்யா தென்னிந்திய உணவுகளை அதிகம் விருப்புவதோடு கடுமையான சைவ Dietடை கடைப்பிடிக்கின்றாராம்.
ஆடை திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி வரை பிரபலம் ஆகிய அமலா பால் தனது வளர்ப்பு நாயை இழந்த சோகத்தில் சைவ உணவு உண்பவராக மாறினாராம்.