பிக்பாஸிற்குள் செல்லும் 10 போட்டியாளர்களின் பெயர் விபரம் இதோ...
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் விபரம் தற்போது வெளியாகி வருகின்றது.
பிரபல ரிவியில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
ரசிகர்கள் யூகித்தது போன்று இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக ப்ரொமோவில் கமல் கூறியிருந்தார். இதனால் நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகம் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிரபல ரிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனின் சம்பளம் ரூ.130 கோடி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விபரம் யூகத்தின் அடிப்படையில் வெளியாகி வருகின்றது.
நடிகை தர்ஷா குப்தா, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, நடிகை அன்பே ஆரூயிரே சீரியல் நிலா, நடிகை நிவிஷா, பிரபல மாடல் அனன்யா, ரோஷினி ஹரிப்ரியன், தொகுப்பாளினி ஜாக்லின், உமாரியாஸ் கான், ஸ்ரீதேவி விஜயகுமார், யுவன் பாலாஜி, நடிகர் அப்பாஸ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு, ரக்ஷன், மாகாபா ஆனந்த், பப்ளு பிரித்விராஜ், விஜே அர்ச்சனா என பெயர் வெளியாகியுள்ளது.
ரவீனா
ஜோவிகா
தர்ஷா குப்தா
குமரன்
இந்திரஜா
விஷ்ணு
அப்பாஸ்
அனன்யா
மூன்நிலா
பப்லு பிரித்விராஜ்