தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகம்.. அதுவும் இந்த தெலுங்கு படத்தின் ரீமேக்காம்..
உச்ச நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் தனது நடிப்பினால் கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய்.
இவரின் மேல் பல விதமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தாலும், தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் எப்போது சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்றும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
இயக்குனராக படித்து வரும் சஞ்சய் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறாராம்.
அதுவும் தெலுங்கில் சமீபத்தில் அறிமுக நடிகர், நடிகையின் நடிப்பில் வெளியான உப்பண்ணா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தெலுங்கில் விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தில் வெளியான இப்படம் மூன்று நாட்களில் சுமார் 50 கோடி ருபாய் வரை வசூல் செய்ததாகவும் தெரிவிக்கின்றனர்.