அட்லீயை நம்பி ஷாருக் கான் எடுத்த ரிஸ்க்.. ஜவான் மொத்த பட்ஜெட் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!
இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக் கான் நடித்து இருக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்து இருக்கின்றனர். மேலும் அனிருத் இந்த படம் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார்.
அதனால் ஹிந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர்.
தற்போது ஜவான் படத்தின் மொத்த பட்ஜெட் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 300 கோடி ருபாய் ஷார்ட் ஜவான் படத்திற்காக செலவிட்டு இருக்கிறாராம்.
அட்லீ கெரியரிலேயே இது மிகப்பெரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக் கேரியரிலும் இந்த படம் தான் அதிக பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீ மீது இருக்கும் நம்பிக்கையில் ஷாருக் இவ்வளவு பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்.
அட்லீயின் முந்தைய படமான பிகில் 180 கோடியிலும், மெர்சல் 130 கோடியிலும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.