விமான நிலையத்தில் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் வீடியோ..!

விமான நிலையத்தில் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் வீடியோ..!

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். மேலும் அடுத்ததாக தனுஷ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சிறுவன் தன்னுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என ஆசையுடன் இருந்ததை பார்த்த ராஷ்மிகா அந்த சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.. 

LATEST News

Trending News