மாப்பிள்ளை யார் தெரியுமா?..முதல் முறையாக வருங்கால கணவர் குறித்து பேசிய அதிதி ஷங்கர்!!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் தான் அதிதி ஷங்கர்.
முதல் படத்திலேயே பிரபலமான அதிதி ஷங்கர், முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
சமீபத்தில் அதிதி ஷங்கர் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக பேசிய அதிதி, "நான் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு மாப்பிள்ளை யார் என்று தெரியா வேண்டும்" என திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அதிதி ஷங்கர்.
