இதுல யார் அம்மா? யார் மகள்? மகள்களுடன் குஷ்புவின் க்யூட் புகைப்படங்கள்..!

இதுல யார் அம்மா? யார் மகள்? மகள்களுடன் குஷ்புவின் க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள்களுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இதில் யார் அம்மா? யார் மகள்? என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்..

நடிகை குஷ்பு கடந்த 2000 ஆண்டு இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள அவர் அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்று முன்னர் தனது மகள்களுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை குஷ்பு பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, ‘ நான் எப்போதுமே எனது மகள்களை விரும்புகிறேன்,, கடவுள் எனக்கு கொடுத்த நல்ல நண்பர்கள் எனது இரண்டு மகள்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ள நிலையில், மகள்களைப் போலவே இளமையாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், இதில் யார் மகள்? யார் அம்மா? என்று தெரியவில்லை என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

LATEST News

Trending News