பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்!!
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர்.
தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இரண்டு படங்களுக்கும் நேரம் ஒதுக்கி அவர் பணியாற்றி வருகிறார்.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்களுக்காக மட்டும் ஷங்கர் 90 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்திருக்கிறார்.
தமன் இசையமைத்து இருக்கும் பாடல்களுக்கு பிரபுதேவா, ஜானி மாஸ்டர் உள்ளிட்ட பல முக்கிய நடன இயக்குனர்களை வைத்து பாடல் காட்சிகளை ஷங்கர் எடுத்து இருக்கிறார்.