டாப் லிஸ்டில் இடம் பெற்ற மாஸ்டர்! மேலும் ஒரு சூப்பரான சாதனை!

மாஸ்டர் திரைப்படம் ஒரு கேங்கஸ்டர் கதை அமைப்பில் இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்தது.

மாஸ்டர் திரைப்படம் ஒரு கேங்கஸ்டர் கதை அமைப்பில் இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்தது. விஜய் ஹீரோவாக மாஸ்டர் பேராசிரியராக நடித்து அசத்தினார். அவருக்கு இணையாக விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இன்னொரு ஹீரோ போலவே அவர் தெரிந்தார்.

முன்பே குறிப்பிட்ட நாளில் வெளியிட முடியாமல் தள்ளிப்போனாலும் ரசிகர்கள் அதே வரவேற்பளித்தனர். வசூலும் ரூ 240 கோடிகளுக்கு மேல் வந்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்.

 

இப்படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. வாத்தி கம்மிங் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது பாடல் 50 மில்லியன் பார்வைகளை தாண்டி வெற்றிபெற்றுள்ளது.

டிவிட்டரில் #VaathiComingHits50MViews என குறிப்பிட்டு கொண்டாடி வந்த நிலையில் டிவிட்டர் டாப் 10 டிரெண்டிங் லிஸ்டில் இடமும் பிடித்துள்ளது. இதனால் மாஸ்டர் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES