அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுனாங்க..ஜீ தமிழ் சீரியல் நடிகை வேதனை...
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்வாதி சர்மா நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்வாதி சர்மா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து இருக்கிறேன். தெலுங்கில் சீரியல்களிலும் நடித்துள்ளேன். என்னுடைய என்னை சென்னைக்கு செல்லவேண்டாம் என்று சொல்வார். அதற்கு காரணம் எனக்கு அப்போது தமிழ் தெரியாது.
நான் ஒரு படத்திற்காக அம்மாவுடன் சென்னை வந்து இருந்தேன். அப்போது அந்த நபர் அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார். நான் அந்த நபரை தனியாக அழைத்து மோசமாக திட்டிவிட்டேன். என்னுடைய அம்மா முன்னாடியே இது போன்று கேட்டது எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.