வேற லெவலில் அஜித்.. ஷாலினி அஜித் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

வேற லெவலில் அஜித்.. ஷாலினி அஜித் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில் அவ்வப்போது அவர் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள அஜித்தின் மாஸ் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்த சமூக வலைதளத்தில் இல்லை என்றாலும் அவரது மனைவி ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் இணைந்தார். அதுமுதல் அவர் அஜித்தின் பிறந்தநாள், தனது பிறந்த நாள் மற்றும் தனது குழந்தைகளின் பிறந்தநாளின் போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் என்பதும் அஜித் வெளிநாட்டு பயணம் குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சில மணி நேரத்துக்கு முன்பு அஜித்தின் மாஸ் புகைப்படம் ஒன்றை ஷாலினி அஜீத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை இயக்குனர் மகிழ் திருமேனி முடித்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது..

LATEST News

Trending News

HOT GALLERIES