வயதான பெண்களை கூட விட்டுவைக்க மாற்றாங்க..வாணி போஜன் விளாசல்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த நடிகைகளில் ஒருவர் வாணி போஜன்.
பல திரைப்படங்களில் இவர் நடித்து வந்தாலும், கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே படம் தான் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் வாணி போஜன் நடிப்பில் கடந்த வாரம் பாயும் ஒளி நீ எனக்கு எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக 5ற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை வாணி போஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நபர்களை குறித்து பேசினார்.
இதில் ' நான் பஸ்சில் பயணிக்கும் போது சிக்கனலில் வயதான பெண்களின் சேலை லைட்டா விலகி இருப்பதை கூட சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.
அவனையெல்லாம் பார்த்தாலே நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா என்று தான் தோணும்' என பேசினார். இவர் பேசிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.