தினேஷ் மீது பொய் புகார் கொடுத்து வசமாக மாட்டிக்கொண்ட ரக்ஷிதா - ஷாக்கான ரசிகர்கள்...

தினேஷ் மீது பொய் புகார் கொடுத்து வசமாக மாட்டிக்கொண்ட ரக்ஷிதா - ஷாக்கான ரசிகர்கள்...

கணவர் தினேஷ் மீது பொய் புகார் கொடுத்து வசமாக மாட்டிக்கொண்ட ரக்ஷிதாவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் ரக்ஷிதா கலந்து கொண்டார். அவருக்கு ஆதரவாக தினேஷ் சமூகவலைத்தளங்களில் பேசி வந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரக்ஷிதா வெளியே வந்த பிறகு இரண்டு பேரும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.

rakshita-indian-film-producerஇந்நிலையில், நேற்று திடீரென ரக்ஷிதா கணவர் தினேஷ் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை தினேஷ் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினேஷின் செல்போனை வாங்கி போலீசார் பரிசோதனை செய்துள்ளனர். அதில் எந்த குறுஞ்செய்தியும் ரக்ஷிதாவிற்கு செல்லவில்லையாம்.இதனால், போலீசார் மேலும் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

rakshita-indian-film-producerஇது குறித்து தினேஷ் பேசுகையில்,

நாங்கள் இருவரும் பிரிந்து 2 வருடங்களாகிறது. இவ்வளவு மாதங்கள் கழித்து இப்போதுதான் நான் ரக்ஷிதாவை பார்க்கிறேன். என் மீது புகார் கொடுத்ததில் நான் மிகவும் நொருங்கி போயுள்ளேன். ரக்ஷிதாவை யாரோ தவறான வழியில் நடத்துகிறார்கள். அதிலிருந்து ரக்ஷிதா மீண்டு வர வேண்டும். கொரோனா காலத்தில் இரண்டு பேருமே வேலை இல்லாமல் இருந்தோம். அப்பகூட நான் பணத்தை கேட்டு பிரச்சினை செய்ததில்லை.

பணத்தை கேட்டு மிரட்டினேன் என்று என் மீது பொய் புகார் கூறியுள்ளார். இந்த புகாரும் நேற்றோடு முடிந்து விட்டது. இனிமேல் நீங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். நாங்கள் சேர்ந்து விடுவோம் என்று ரசிகர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியும், மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

LATEST News

Trending News

HOT GALLERIES