89 வயதில் இளம் காதலியால் தந்தையாகும் பிரபல ஹாலிவுட் நடிகர்- வாழ்த்தும் ரசிகர்கள்...
தி காட் பாதர் என்ற ஆங்கில படம் மூலம் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் அல் பசினோ.
89வது வயதிலும் தொடர்ந்து படங்கள் நடித்த வண்ணம் உள்ளார். அல் பசினோ தனது முன்னாள் காதலிகள் மூலம் 3 பிள்ளைகளை பெற்றுள்ள நிலையில் இப்போது 4வது குழந்தைக்கும் அப்பாவாக இருக்கிறார்.
அல் பசினோ 29 வயதாகும் நூர் அல்பல்லா என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்.
விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ள அல் பசினோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.