சினிமா ஆசை காட்டி இளம் பெண்ணிடம் அத்து மீறிய மலையாள நடிகர்.. வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

சினிமா ஆசை காட்டி இளம் பெண்ணிடம் அத்து மீறிய மலையாள நடிகர்.. வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் உன்னிமுகுந்தன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சினிமா ஆசை காட்டி இளம் பெண்ணிடம் அத்து மீறிய மலையாள நடிகர்.. வழக்கில் திடுக்கிடும் திருப்பம் | Unni Mukundan Misbehave With Girl

சமீபத்தில் கோட்டயத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உன்னிமுகுந்தன் மீது வழக்கு பதிவு செய்திருந்தார். அதில், ஒரு படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லி அந்த பெண்ணிடம் உன்னிமுகுந்தன் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறப்பட்டது. இந்த வழக்கை காவல் துறையினர் தீவிர விசாரணை நடித்து வந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசமாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும். இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி உன்னிமுகுந்தன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் உன்னிமுகுந்தனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டு தடை விதித்தது

தற்போது அந்த பாதிக்கப்பட்ட பெண், சமரச தீர்வு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.  

LATEST News

Trending News

HOT GALLERIES