உடல் எடையை சுத்தமாக குறைத்தது எப்படி?- ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா கூறிய டிப்ஸ்

உடல் எடையை சுத்தமாக குறைத்தது எப்படி?- ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா கூறிய டிப்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த தொடர் ராஜா ராணி 2.

தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பான தியா அவுர் பாதி அம் என்ற தொடரின் ரீமேக் தான் என்பது அனைவருக்குமே தெரியும்.

தொடர் ஆரம்பத்தில் நன்றாக ஓடிக் கொண்டிருக்க பின் நிறைய கதாபாத்திர மாற்றங்கள் நடந்தது. முக்கியமாக கதாநாயகி மட்டும் 3 பேர் மாறினார்கள், ஒருவழியாக தொடரும் முடிந்துவிட்டது.

இந்த தொடரில் வில்லியாக நடித்து வந்தவர் அர்ச்சனா, வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட திட்டுகளை தான் வாங்கினார். தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய இவர் இப்போது உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் சுடு தண்ணீர், பசிக்கும் போது மட்டுமே குறைவான அளவு சாப்பிடுவாராம், அதாவது 3 இட்லி என்ற இடத்தில் 1 இட்லி சாப்பிட்டு அதனுடன் நிறைய புரோட்டின் எடுத்து கொள்வாராம்.

வீட்டிலேயே உடல் எடையை குறைக்கும் வகையில் சில உடற் பயிற்சிகள் செய்வாராம். இதுபோன்ற சில விஷயங்களை செய்து தனது உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார்.

உடல் எடையை சுத்தமாக குறைத்தது எப்படி?- ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா கூறிய டிப்ஸ் | Serial Actress Archana About Her Weight Loss

LATEST News

Trending News

HOT GALLERIES