ரஜினிகாந்த் கடைசி படம் குறித்து வெளிவந்த தகவல்.. உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர், லால் சலாம் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதன்பின் யாருடைய இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால், சமீபகாலமாக தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்பது போல் தகவல் வெளியாகிறது.
கடந்த வாரம் கூட இப்படத்தின் போட்டோ ஷூட் நடந்தது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மிஷ்கின், ரஜினி - லோகேஷ் படம் குறித்து பேசியுள்ளார்.
"லோகேஷ் அடுத்தது ரஜினிகாந்துடன் படம் பண்றாரு. இதுதான் ரஜினியின் கடைசி படமா இருக்கும்னு சொல்றாங்க. ஆனா எந்த அளவிற்கு அது உண்மை என்று தெரியவில்லை. அந்த படத்தை லோகேஷ் பண்றது ரொம்ப பெருமையா இருக்கு" என பேசியுள்ளார்.
இந்த விஷயம் தற்போது காட்டு தீ போல் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.